கோழிகறிக்காக மகனை கட்டையால் தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிகறிக்காக மகனை கட்டையால் தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்துள்ள குட்டிகர் பகுதியை சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் சிவராம்(32). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். அப்போது, இதை ருசித்து பார்ப்பதற்காக சிவராமன் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை ஷீனா தரமறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த தந்தை தனது மகன் என்று பாராமல் கட்டை எடுத்து வந்து சிவராமனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக சிவராமன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்திய பிறகு சிவராமனின் தந்தை ஷீனாவை கைது செய்தனர். கோழிகறிக்காக பெற்ற மகனையே தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.