ஆத்திரத்தில் மருமகனை கொடூரமாக வெட்டி கொன்ற மாமனார்..!

Published : Jul 28, 2019, 05:46 PM IST
ஆத்திரத்தில் மருமகனை கொடூரமாக வெட்டி கொன்ற மாமனார்..!

சுருக்கம்

ராமநாதபுரம் அருகே பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்து மருமகனை வெட்டி கொன்றது தொடர்பாக மாமனாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் அருகே பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்து மருமகனை வெட்டி கொன்றது தொடர்பாக மாமனாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள சுயம்பு லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (34). மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு மீனாட்சி (32) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக முனீஸ்வரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மாமனார் சிவலிங்கம் (80) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மருமகனும், மாமனாரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், அடிக்கடி பணத்தை கேட்டத்தால் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக சிவலிங்கம் ஆத்திரம் அடைந்து, அரிவாளால் முனீஸ்வரனை சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கணவரை தந்தையே கொலை செய்தது மீனாட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிவலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி