உடல் சுகத்துக்காக பெற்ற மகனையே ஈவு இரக்கமின்றி கொன்றது அம்பலம்... தொடையின் மீது ஏறி மிதித்து, மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு இறந்த கொடுமை!!

By sathish kFirst Published Jul 28, 2019, 5:32 PM IST
Highlights

சிறுவனின் தொடையின் மீது ஏறி மிதித்ததால், தொடை சதை சிதைந்து, ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. காலில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு அவன் இறந்துள்ளாதாக டாக்டர் கூறியுள்ளார். உடல் சுகத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனையே ஈவு இரக்கமின்றி கொன்றது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

சிறுவனின் தொடையின் மீது ஏறி மிதித்ததால், தொடை சதை சிதைந்து, ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. காலில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு அவன் இறந்துள்ளாதாக டாக்டர் கூறியுள்ளார். உடல் சுகத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனையே ஈவு இரக்கமின்றி கொன்றது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சோமசுந்தரம். பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிஷோர் என்ற 3½ வயதில் ஒரு மகன் இருந்தான்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு, வ.உ.சி. நகரில் கள்ளக் காதலன் கார்த்திகேயன், மற்றும் தனது மகன் கிஷோருடன் புவனேஸ்வரி வசித்து வந்தார்.கார்த்திகேயன் பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே மாதம் கிஷோருக்கு காயமடைந்து விட்டதாகவும், திருவாரூருக்கு மகனை அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும், புவனேஸ்வரி அவரது தாயார் புஷ்பாவிடம் கூறியுள்ளார்.

இதனால் பதறிப்போன புஷ்பா, அவர்கள் திருவாரூர் வந்து சேர்ந்ததும் சென்று பார்த்தபோது கிஷோர் இறந்த நிலையில் கிடந்ததும், அவனது உடலை எரிப்பதற்கான செயலில் அவர்கள் ரகசியமாக ஈடுபட்டு கொண்டிருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் பதறிப்போன புஷ்பா, சந்தேகம் அடைந்து திருவாரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாய் புவனேஸ்வரி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் இறந்து கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தார்.

விசாரணையில், கிஷோர் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததால் இறந்து விட்டதாக அவர்கள் போலீசில் தெரிவித்தனர். மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கார்த்திகேயன் மற்றும் புவனேஸ்வரியிடம் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்துக்கொலை செய்ததாக இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து 2 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

சிறையிலிருக்கும் இவர்கள்,  ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதி ஆஜராகி, ‘இந்த வழக்கில் புவனேஸ்வரிக்கு எதிராக அவரை பெற்ற தாய்தான் புகார் செய்துள்ளார். சிறுவனை புவனேஸ்வரி அடித்த போது நேரில் பார்த்த சாட்சிகளும் உள்ளனர் என்று கூறி பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார். 

அதை படித்து பார்த்த நீதிபதி, ‘வலது தொடையில் ஏற்பட்ட ரத்த கட்டினால் உயிர் போனதாக டாக்டர் கூறியுள்ளாரே? ரத்த கட்டினால் உயிர்போகுமா? என்று கேள்வி எழுப்பி பிரேத பரிசோதனை செய்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சந்திரசேகர்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.  

இதன்படி, நீதிபதி முன்பு டாக்டர் சந்திரசேகர் நேற்று ஆஜராகி, சிறுவனின் தொடையின் மீது ஏறி மிதித்ததால், தொடை சதை சிதைந்து, ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. காலில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டு அவன் இறந்துள்ளான் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.பி.சுரேஷ்குமாரும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, புவனேஸ்வரிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார். கார்த்திகேயனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

click me!