மகள் கண்முன்னே பயங்கரம்... மாமனாரை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க குத்திக்கொன்ற மருமகன்...!

Published : Jan 23, 2021, 11:52 AM IST
மகள் கண்முன்னே பயங்கரம்... மாமனாரை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க குத்திக்கொன்ற மருமகன்...!

சுருக்கம்

சொத்துக்காக மகள் கண்முன்னே மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சொத்துக்காக மகள் கண்முன்னே மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 46-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (82). இவர், தன்னுடைய மகள் பிரேமலதா, மருமகன் குமார் (52) மற்றும் அவர்களது 2 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குமார், வேலைக்கு எங்கும் செல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் கடந்த 4 ஆண்டுகளாக மாமனார் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஜெகநாதனுக்கு ஆற்காடு வரகரபுதூர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.  அந்த இடத்தை குமார் தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு அடிக்கடி மாமனார் ஜெகநாதனிடம் கேட்டு தகராறு செய்து வந்தார். இதற்கு அவர் மறுத்து வந்தார். இதனால் மாமனார்-மருமகன் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் இருவருக்கும் மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார் மாமனார் ஜெகநாதனை சரமாரியாக தாக்கி, சமையல்  அறையில் இருந்த காய்கறி கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அமர்ந்து இருந்த மருமகன் குமாரை போலீசார் கைது செய்தனர். சொத்துக்காக மாமனாரை மருமகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்