
சென்னையில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்விரோதம்
சென்னை தண்டையார்பேட்டை தண்டையார் நகரைச் சேர்ந்தவர் ஜீவன் குமார் (26). இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை தியாகி பெருமாள் சாலை கோவில் தெரு சந்திப்பில் நேற்று இரவு 9 மணியளவில் நடந்து சென்றார். அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இவர்களிடம் தப்பிக்க ஜீவன் குமார் முயற்சித்தார்.
இதையும் படிங்க;- ரூ.5000 கொடுத்தால் போதும் இளம்பெண்களுடன் குஜாலாக இருக்கலாம்.. அழகிகளை வைத்து விபச்சாரம்.. சிக்கியது எப்படி?
கொலை
ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜீவன் குமாரை பொதுமக்கள் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜீவன் குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜீவன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பகீர் தகவல்
மேலும், வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில் விக்கி, ரமேஷ், நரேஷ், தமிழ், அஜய் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து, 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக நிர்வாகி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை அரிவாளால் வெட்டி ஜீவன் குமார் சிறை சென்று வெளியே வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க;- கணவருக்கும், முதல் கள்ளக்காதலனுக்கும் தெரியாமல் உல்லாசம்.. 2வது கள்ளக்காதலனை வைத்து பெண் செய்த பகீர் சம்பவம்.!