பெண் டாக்டர்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை... போலி டாக்டர் சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல்...

By sathish kFirst Published May 18, 2019, 12:25 PM IST
Highlights

கல்யாண செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டர்களை வளைத்தும், ஒரு டப்பென டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி டாக்டராக நடித்தது எப்படி என பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

திருச்சி  டோல்கேட் பிச்சாண்டார் கோவில் வி.என்.நகரை சேர்ந்த கணவரை இழந்த தாமரைச்செல்வி புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் ஆன்லைனில் திருமண பதிவு செய்துள்ளார்.

தான் ஒரு டாக்டர் என்று சக்கரவர்த்தி திருமண பதிவு செய்ததால் தாமரைச்செல்விக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சக்கரவர்த்தி முதல் கல்யாணம் செய்ததை மறைத்து, தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை காட்டியதால், அதனை நம்பி அவரிடம் நெருங்கி பழகிய தாமரைச்செல்வி ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் வரை  சக்கரவர்த்திக்கு கொடுத்துள்ளாராம். இவ்வளவு பழகியும்  சக்கரவர்த்தி  தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சக்கரவர்த்தியின் நடவடிக்கைகளில் சந்தேகமான டாக்டர் தாமரைச் செல்வி திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் கடிதம் இருந்துள்ளது. அந்தக் கடிதம் தொடர்பாக விசாரித்தபோதுதான் திருமணத் தகவல் வெப்சைட்டில் பதிவு செய்து பல பெண்களை சக்கரவர்த்தி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

கல்யாணம் ஆனதை மறைத்து, குழந்தை இருந்தாலும் வாழ்க்கை தரத் தயார் என அவரது கணக்கில் குறிப்பிட்டிருந்ததால் பல பெண்கள் அவரது வலையில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாகப் பெண் டாக்டர்கள். பெண் டாக்டர்களை திருமண ஆசை காட்டி, உல்லாசம் அனுபவித்து வந்ததும் , லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் தாமரைச்செல்வி, திருச்சி எஸ்.பி ஆபீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் மந்தமாக இருந்ததால், முதல் திருமணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று  ஐகோர்ட்டு, தாமரைச்செல்வி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலையில் உள்ள வீட்டில் இருந்த சக்கரவர்த்தியை கைது செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சக்கரவர்த்தியும், முருகனும் நேற்று லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சார்பில் வாதாடிய, வழக்கறிஞர் கூறுகையில், சக்கரவர்த்தி டாக்டருக்கு படித்தது போல் போலியான ஆவணங்கள் தயாரித்து உள்ளார். மேலும் அவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது தெரிகிறது. இவர் பெண் டாக்டர்களை குறி வைத்தே  மோசடிகளில் இறங்கி உள்ளார். இந்த வழக்கில் திருமண பதிவுகள் மோசடிக்கு சில ஆன்லைன் நிறுவனங்கள் உடந்தையாக இருந்திருப்பதால் அவற்றை முறைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறி உள்ளேன் என்றார். 

click me!