சிறுமிக்கு பாலியல் தொல்லை..வாயில் ஆசிட் ஊத்திய கொடூரன் வெறிச்செயல் !

Published : Jul 17, 2022, 06:32 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை..வாயில் ஆசிட் ஊத்திய கொடூரன் வெறிச்செயல் !

சுருக்கம்

சிறுமியை பாலியல் கொடுமை செய்து, வாயில் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

புதுடெல்லியில் செருப்பு தொழிற்சாலை ஒன்றின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெய் பிரகாஷ். இவருக்கு வயது 31 ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, உதவிக்காக அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.  பிறகு சிறுமியை தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு  பிரகாஷ் மேலும் ஒரு விபரீத செயலை செய்தான். அது என்னவென்றால், வழக்கம் போல சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது சிறுமியை நிறுத்திய பிரகாஷ் அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றியுள்ளான். இதனால், சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

பின்னர் நடந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், இந்த கொடூர செயலை செய்த பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில் கற்பழிப்புக்கான போக்சோ சட்டம், கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆணையம் கேட்டுள்ளது. 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்றதாக எங்களுக்கு முக்கிய புகார் வந்துள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

எங்கள் குழு தொடர்ந்து சிறுமியின் நிலையைக் கண்காணித்து சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என சுவாதி மலிவால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிறுமியை பாலியல் கொடுமை செய்து, வாயில் ஆசிட் ஊற்றிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!