வெளியானது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வரைபடம்...! 1 2 3 4 ...ஷூட் ..!

Published : Dec 06, 2019, 01:22 PM IST
வெளியானது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வரைபடம்...! 1 2 3 4 ...ஷூட் ..!

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர்.

வெளியானது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வரைபடம்...! 1 2 3 4 ...ஷூட் ..! 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது 

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது

இது தொடர்பபான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்ற போது அவர்கள் 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். அதாவது விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே 4 பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான வரைபடம் தற்போது வெளியாகி  உள்ளது. அதன் படி, எந்தெந்த இடத்தில்  எவ்வளவு இடைவெளியில் இந்த 4 குற்றவாளிங்களை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர் என வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது. இந்த வரைபடம் உங்கள் பார்வைக்கு.....

இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்ததற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரை மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?