மது போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த போதை ஆசாமி தற்கொலை; சிறுமிகள் படுகாயம்

By Velmurugan s  |  First Published Apr 13, 2023, 5:53 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைக்குச் சென்ற மனைவி வீட்டிற்கு வர தாமதமானதால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பெற்ற மகள்களுக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட எலக்ட்ரிசன் தனது இரு பெண் குழந்தைகளையும் தீவைத்து கொழுத்திய நிலையில் இரு குழந்தைகளும் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி எலக்ட்ரிசியன் சடலத்தை கைப்பற்றி இரணியல் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி போதைக்கு அடிமையானதால் குடும்ப வறுமையாலும் இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும், குடும்ப தேவைக்காகவும் மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார்.

Latest Videos

undefined

பேக்கரி கடையில் வேலை பார்க்கும் அனிதா நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கடையில் போளி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது இரு குழந்தைகளும் கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது

குடிபோதையில் இருந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டி விட்டு கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மீதும் பீரோவில் இருந்த புடவை மற்றும் ஆடைகளை குழந்தைகள் மீது தூக்கி போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும் தானும் உடலில் மண்னெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நாகராஜன் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த நிலையிலும், இரு குழந்தைகளும் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரு குழந்தைகளும் 80-சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் காவல் துறையினர் நாகராஜனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!