சென்னையில் பெண் போலீஸ் மீது கைவைத்த ‘போதை’ இளைஞர்கள்.. 'வெளுத்து' வாங்கிய காவல்துறை.! வைரல் சம்பவம் !

Published : Apr 22, 2022, 10:33 AM IST
சென்னையில் பெண் போலீஸ் மீது கைவைத்த ‘போதை’ இளைஞர்கள்.. 'வெளுத்து' வாங்கிய காவல்துறை.! வைரல் சம்பவம் !

சுருக்கம்

பெண் சப்-இன்ஸ்பெக்டர் தோளின் மீது கைபோட்டு ‘உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா’ என்று பேசியுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சீருடை அணியாமல், சாதாரணமாக பேன்ட், சட்டை அணிந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அருகே உள்ள தள்ளுவண்டி கடையில் மோர் குடித்து வந்துள்ளார். 

அப்போது அவர் பெண் போலீஸ் என்று தெரியாமல், அவரை வம்புக்கு இழுத்து இருக்கிறார்கள் குடி போதையில் இருந்த இளைஞர்கள். அதுவும் எப்படியென்றால் , பெண் சப்-இன்ஸ்பெக்டர் தோளின் மீது கைபோட்டு ‘உன்ன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா’ என்று பேசியுள்ளனர். ’தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறியும் அவரை விடாத அந்த இளைஞர்கள்,நீ யாரு,உன்ன பார்த்த மாதிரி இருக்கு’ என்று மறுபடியும் கூற கடுப்பான அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்.

பிறகு பொதுமக்கள் உதவியுடன் நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பெண் உதவி ஆய்வாளரிடம் ரகளையில் ஈடுபட்ட செல்வக்குமார் (23), விக்னேஷ் (22), நரேஷ் (20) ஆகிய மூன்று பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது மூன்று பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. உஷார் மக்களே ! முகக்கவசம் அவசியம்.!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!