நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவி இரும்பு கம்பியால் அடித்து கொலை.. இறுதியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

Published : Jan 20, 2023, 11:03 AM IST
நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவி இரும்பு கம்பியால் அடித்து கொலை.. இறுதியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா(30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி  உமாமகேஸ்வரி(25). இவர்களுக்கு கிருத்திகா மற்றும் விக்னேஷ்வர் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா(30), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி  உமாமகேஸ்வரி(25). இவர்களுக்கு கிருத்திகா மற்றும் விக்னேஷ்வர் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,  மனைவி உமாமகேஸ்வரியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு  உமாமகேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக தனது மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு செங்கையா மாமனார், மாமியாரிடம் கேட்டுள்ளார். இதனை நம்பி உமாமகேஸ்வரி செங்கையாவுடன் சென்றுள்ளார். குழந்தைகளை பாட்டி வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால், ஆத்திரமடைந்த செங்கையா இரும்பு கம்பியால் உமாமகேஸ்வரியின் தலையின் பின்புறத்தில் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, மனைவியை கொலை செய்ததாக ஸ்ரீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாமகேஸ்வரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!