கால்நடை பெண் மருத்தவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் !! தெலங்கானா அரசு அதிரடி !!

Published : Dec 06, 2019, 07:52 AM ISTUpdated : Dec 06, 2019, 08:55 AM IST
கால்நடை  பெண் மருத்தவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும்  என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் !! தெலங்கானா அரசு அதிரடி !!

சுருக்கம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை கற்பழித்து எரித்துக் கொன்ற 4 குற்றவாளிகள் இன்று போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி.. இதற்கிடையில், பிரியங்கா கடந்த 27-ம் தேதி தனது பைக் பஞ்சர் ஆனதால் ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி உள்ளார்

அப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் பிரியங்காவை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். 

இதைத் தொடர்ந்து நேற்று இரவு குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் போலீசை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?