பட்டப்பகலில்... நடு ரோட்டில் தங்கையின் கணவரை ஓட ஓட வெட்டி சிதைத்த அண்ணன்கள்... அதிரவைக்கும் தெலுங்கானா

Published : Jun 09, 2019, 04:53 PM IST
பட்டப்பகலில்... நடு ரோட்டில் தங்கையின் கணவரை ஓட ஓட வெட்டி சிதைத்த அண்ணன்கள்... அதிரவைக்கும் தெலுங்கானா

சுருக்கம்

தங்கையை காதலித்து கல்யாணம் செய்ததால், விருந்து கொடுப்பதாக  ஏமாற்றி வரவழைத்து, பட்டப்பகலில் நடுரோட்டில்  ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திவிட்டு, தங்கை கண்ணீர்விட்டு கதறியும் விடாமல் துடிக்க துடிக்க குத்தி சாய்த்து விட்டு கூலாக  தப்பித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

தங்கையை காதலித்து கல்யாணம் செய்ததால், விருந்து கொடுப்பதாக  ஏமாற்றி வரவழைத்து, பட்டப்பகலில் நடுரோட்டில்  ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திவிட்டு, தங்கை கண்ணீர்விட்டு கதறியும் விடாமல் துடிக்க துடிக்க குத்தி சாய்த்து விட்டு கூலாக  தப்பித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

ஹைதராபாத்தைச் சேர்ந்த இம்தியாஸ்  - ஃபாத்திமா இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களில்ன் காதலை ஃபாத்திமாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.  இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் கல்யாணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில், ஃபாத்திமா காணாமல் போனதாக பெற்றோர், அண்ணன்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதன்பேரில் எஸ்.ஆர். நகர் காவல்துறையினர் விசாரித்ததில் ஃபாத்திமா - இம்தியாஸை காதலித்து வந்ததும், இவர்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்காததால் இருவரும் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவீட்டாரையும் சமாதானம் பேசுவதற்காக போலீசார் அழைத்துள்ளனர். அப்போது அவர்கள் வரவில்லை, இதனைத் தொடர்ந்து ஃபாத்திமாவின் தந்தை இம்தியாஸை தொடர்புகொண்டு உங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்கிறேன்  நீங்கள் விருந்துக்குவரவேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய இம்தியாஸின் குடும்பத்தினர் ஃபாத்திமா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஹைதராபாத் சாலையில் வைத்து  சிக்னலில் இம்தியாஸ் சென்ற கார் நிற்கிறது. ஒரு கும்பல் காரை மறிக்கவும் அவர் வாகனத்தில் இருந்து இம்தியாஸ் வெளியே சாலையில் ஓடுகிறார். அப்போது 9 பேர் கொண்ட ஒரு கும்பல் இம்தியாஸை கத்தியால் தாக்கியது.  

பின்னால் இருவர் அவரைத் துரத்திச் செல்கின்றனர். கைகளில் வைத்திருக்கும் கத்தியால் கடுமையாகத் தாக்குகிறார்கள். தன்னை விட்டு விடுமாறு கெஞ்சுகிறார். ஆனாலும்  அந்த  இருவர் தங்களது வெறித்தனமாக வெட்டுகின்றனர்.  பட்டப்பகலில், நடு ரோட்டில் 100-க்கும் அதிகமான நபர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்கின்றனர்.  

இந்தத் தாக்குதலில் இம்தியாஸுக்கு தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வந்ததில், இம்தியாஸை கொடூரமாக கொலை பண்ண தூண்டியது ஃபாத்திமாவின் அண்ணன்கள்  முகமது அலி மற்றும் அஹமது அலி என்பது தெரியவந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்