அவங்க ராகிங் என்னால தாங்க முடியல..வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பதிவு..மருத்துவ மாணவன் வீபரிதம்..

By Thanalakshmi VFirst Published Dec 12, 2021, 2:53 PM IST
Highlights

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தொல்லையால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இளநிலை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை, மூன்றாம் ஆண்டு பயிலும் உள்ளூர் மாணவர்கள் விடுதியில் வைத்து முட்டி போடச் செய்ததாகவும், சிகரெட் வாங்கி வருமாறு மிரட்டி ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.  

மேலும் இதுக்குறித்து விடுதிக்காப்பாளரிடம் புகார் கொடுத்து அவர் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விடுதி காப்பாளர் பொறுப்பிலுள்ள இளவரசன் என்பவர் நோயியல் பாடப்பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து மாணவர் புகார் அளித்ததால், அந்த பாடப்பிரிவில் அவருக்கு மதிப்பெண் போடாமல் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் சரவணன், நேற்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டும், இடது கையை பிளேடால் அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லில் நான் பாதிக்கப்பட்டவன் என்று வைத்து, தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சக மாணவர்கள் நேரில் சென்று பார்த்தபோது மாணவர் சரவணன் தனது அறையில் சுய நினைவின்றி மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. தற்போது  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர் சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்களுக்கு ஆதராவாக செயல்பட்டு வருவதாகவும் எந்த புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்து வருகின்றனர் எனவும் சரவணனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக இரண்டு காப்பாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும், தினந்தோறும் விடுதியில் ஒரு மருத்துவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் போலீசாரின் விசாரணையில் கடந்த 23ஆம் தேதி இரவு விடுதியில் சரவணனை முட்டி போட வைத்தும், அரை நிர்வாணமாக நிறுத்தி ராக்கிங் செய்ததும் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது சீனியர் மாணவர்கள் சரவணை தாக்கியதாக கூறப்படும் நிலையில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் மீதும் கேலிவதை தடுப்பு சட்டத்தின் கீழ் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சீனியர் மாணவர்கள் கொடுத்த ராகிங் தொல்லையால் மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!