திருமணம் செய்ய இருந்த பெண்ணை விபச்சார அழகியாக சித்தரித்து... விசிக பிரமுகர் செய்த பகீர் காரியம்..!

Published : Aug 31, 2021, 01:44 PM IST
திருமணம் செய்ய இருந்த பெண்ணை விபச்சார அழகியாக சித்தரித்து... விசிக பிரமுகர் செய்த பகீர் காரியம்..!

சுருக்கம்

ஆத்திரத்தை அடக்க முடியாத அறிவுடைநம்பி அந்தப் பெண்ணின் முகத்தை ஆபாசமான புகைப்படங்களோடு இணைத்து மார்பிங் செய்து இருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், நாஞ்சிகோட்டை அருகே உள்ளது மறியல். இங்கு தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளராக இருந்து வருகிறார் 41 வயதான அறிவுடைநம்பி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டார்.
 
இந்நிலையில் அறிவுடைநம்பி வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கடலூரை சேர்ந்த 28 வயது பெண்ணை திருமண நிச்சயதார்த்தத்தை செய்திருக்கிறார். அடுத்து இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்த பெண் அறிவுடைநம்பிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டார். இதனையடுத்து அவர் அவரோடு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் அறிவுடைநம்பி க்கு அந்தப் பெண் மீது பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தை அடக்க முடியாத அறிவுடைநம்பி அந்தப் பெண்ணின் முகத்தை ஆபாசமான புகைப்படங்களோடு இணைத்து மார்பிங் செய்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருக்கிறார். இதனை அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடந்த ஜூலை மாதம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். விசாரணைக்காக அறிவுடைநம்பியையும் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் புகார் அளித்த அந்த பெண்ணை கொன்று விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விட்டு வருவதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் அறிவுடைநம்பி யை பிடிப்பதற்காக திட்டம் தீட்டி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பொழுதில் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் அறிவுடைநம்பி தலைமறைவாக இருக்கிறார் என்பதை அறிந்து போலீசார் அந்த ஓட்டலை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அவரையும் அங்கிருந்து அதிரடியாக கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்து அறிவுடைநம்பி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

போலீசார் அறிவுடைநம்பியை கைது செய்த 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுடைநம்பி தஞ்சை தொகுதியின் செயலாளர் பொறுப்பு மற்றும் அக்கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி