உல்லாச ’செல்ஃபி’யை அழிக்க மறுப்பு... சென்னையில் காதலனை கடத்தி தாக்கிய அமெரிக்க தொழிலதிபரின் மகள்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2019, 12:45 PM IST
Highlights

தனிமையில் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட செல்பி போட்டோவை அழிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலதிபரின் மகள் தனது காதலனை கடத்தி தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

தனிமையில் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட செல்பி போட்டோவை அழிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலதிபரின் மகள் தனது காதலனை கடத்தி தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் 21 வயதான நவீத் அகமது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ம் தேதி இரவு நவீத் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர். சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள இருட்டு பகுதியில் நவீத் அகமதுவை இறக்கிவிட்டு அவரை கடுமையாக தாக்கி அங்கு தள்ளி விட்டுச் சென்றனர். மயங்கி சரிந்த நவீத் அகமது மறுநாள் காலை மயக்கம் தெளிந்து வீடு சென்றார்.

 

இதுகுறித்து டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் அவர் புகார் செய்தார். அந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின. ’’செங்கல்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் 20 வயது மகளும், நவீத் அகமதுவும் காதலித்து வந்துள்ளனர். தொழில் நிமித்தம் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் அதிபர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளது. பின்னர் தனது காதலனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கடந்த 6-ம் தேதி அந்த இளம்பெண் சென்னை வந்துள்ளார். சென்னை, சேத்துப்பட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் நவீத் அகமதுவுடன் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நவீத் அகமதுவும், இளம்பெண்ணும் அண்ணாநகரில் உள்ள ஒரு பூங்காவில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் நெருக்கமாக எடுத்த ‘செல்பி’ படத்தை அழிக்கும்படி காதலி கேட்டுக் கொண்டுள்ளார். அதனை அழிக்க நவீத் அகமது மறுத்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது காதலியை, நவீத் அகமது தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், தனது நண்பர்களான பாஸ்கர், சரவணன், பாட்ஷா ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். செல்போனில் இருக்கும் நெருக்கமான ‘செல்பி’ படத்தை அழித்துவிட்டு, நவீத் அகமதுவை கடுமையாக தாக்க வேண்டும் அந்த இளம்பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதனையடுத்தே நவீத் அகமது கடத்தப்பட்டு தாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் பாஸ்கர், சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சேத்துப்பட்டு தங்கும் விடுதியில் இருந்த இளம்பெண் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில், அவர் அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டு சங்கத்தில் உறுப்பினராக இருப்பது தெரிய வந்தது. அமெரிக்காவில் இருந்து ஆசை ஆசையாய் காதலனை பார்க்க வந்த காதலியை இப்படி செல்ஃபி எடுத்து காதலன் அழிக்க மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!