ஆம்பூரில் பசு மாடுகளை வெட்டிய மர்ம நபர்கள்.... பொது மக்கள் அதிர்ச்சி !!

Published : Aug 06, 2019, 10:49 PM IST
ஆம்பூரில்  பசு மாடுகளை வெட்டிய மர்ம நபர்கள்.... பொது மக்கள் அதிர்ச்சி !!

சுருக்கம்

வேலூர் மாவட்டம்  ஆம்பூர் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சோட்டாபாய் அவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார் அவர் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளில் 3 பசு மாடுகளை இன்று அதிகாலை  மர்ம நபர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர் 

இதையடுத்து  மாடுகள் அலறியதால் வெளியில் வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்படும்போது மர்ம நபர்கள் தப்பி உள்ளனர்


 
பின்னர் பசு மாடுகளை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மாடுகளை பரிசோதித்த கால்நடை  மருத்துவர்கள்  அவை சில மணி நேரங்களில் அல்லது நாளை  உயிரிழந்து விடும் என்று தெரிவித்ததால் 3 பசு மாடுகளை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர் 

தற்போது 3 பசு மாடுகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது இதுகுறித்து பசு மாட்டின் உரிமையாளர் சோட்டா பாய் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

PREV
click me!

Recommended Stories

விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!
ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்