வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ’கொரோனா கொள்ளையர்கள்’... மக்களே உஷார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 25, 2020, 11:12 AM IST
Highlights

வீடு வீடாக சென்று தாம் கொரோனா பரிசோதனை செய்ய வந்திருப்பதாக கூறி உள்ளே சென்று களவாடிச்  செல்வதாக செய்திகள் பரவி வருகின்றன. 

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு வருவதாக கூறி கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அடுத்த மாதம் 15ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளார் பிரதமர் மோடி. இதனால் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து வருகின்றனர். கொரோனா வைரஸை பயன்படுத்தி இப்போது ஆங்காங்காங்கெ கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்பத்தி வருகிறது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘’கொரோனா வைரஸ் தொடர்பாக உங்களை பரிசோதிக்க வந்திருக்கிறோம் என்று யாராவது கதவைத் தட்டினால் திறக்க வேண்டாம். அப்படியே திறந்தால் கூட, அவர்களை வீட்டிற்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம். கொரோனா வைரஸுக்கு மருந்து தருகிறோம் என்று தற்போது ஒரு குழு பெருமளவில் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

அவர்கள் வீடு வீடாக சென்று தாம் கொரோனா பரிசோதனை செய்ய வந்திருப்பதாக கூறி உள்ளே சென்று களவாடிச்  செல்வதாக செய்திகள் பரவி வருகின்றன. இதுவரை அரசு எந்த ஒரு மருத்துவ பிரிவையும் வீடுவீடாகச் சென்று பரிசோதனை செய்ய அனுப்பவில்லை. எனவே ஊழியர்களை நம்பி ஏமாற வேண்டாம்’’ என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

click me!