கண்ட கண்ட படங்களை பரப்பிய கல்லூரி ஓட்டுநர்..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

By Manikandan S R SFirst Published Jan 5, 2020, 4:51 PM IST
Highlights

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது முகநூல் பக்கத்தில் குழந்தைகள் ஆபாச படம் பகிர்ந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதன்படி ஆபாச படம் பரப்புவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின. கடந்த மாதம் திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை பரப்பியிருக்கிறார். அதன்பிறகு சென்னையை சேர்ந்த மோகன் என்கிற 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். நேற்று பொள்ளாச்சியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்கிற ரெண்தா பாசுமாடரி, சமூக வலைத்தளங்களில் ஆபாச படத்தை பரப்பியதன் அடிப்படையில் போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது கோவையில் மற்றொரு நபரும் ஆபாச படத்தை முகநூல் கணக்கில் பரவவிட்டதாக கைதாகி உள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது முகநூல் பக்கத்தில் குழந்தைகள் ஆபாச படம் பகிர்ந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

click me!