தியேட்டர் மேனேஜரை மரண காட்டு காட்டிய அமமுக ஒன்றிய செயலாளர் ... விரட்டி விரட்டி அடித்து கையை உடைத்த பயங்கரம்!!

Published : Sep 28, 2019, 12:45 PM ISTUpdated : Sep 28, 2019, 01:18 PM IST
தியேட்டர் மேனேஜரை மரண காட்டு காட்டிய அமமுக ஒன்றிய செயலாளர் ... விரட்டி விரட்டி அடித்து கையை உடைத்த பயங்கரம்!!

சுருக்கம்

சிதம்பரத்தில் காப்பான் படம் பார்க்க மனைவியுடன் சென்ற அமமுக ஒன்றிய செயலாளர் திரையரங்கு மேனேஜருடன் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை அழைத்து வந்து மேனேஜரை பயங்கரமாக அடித்து வெளுத்தெடுத்து, விரட்டி விரட்டி தாக்கி கையை உடைத்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளரான மில்லர். இவர் தனது மனைவியுடன் கடந்த வியாழக்கிழமை இரவு காப்பான் படம் பார்க்க வடுகநாதன் தியேட்டருக்கு வந்துள்ளார். அங்கு அவரின் வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்த தியேட்டர் மேலாளர் அலெக்சாண்டர் பார்க்கிங்கில் விட்டு செல்ல சொன்னதால், .  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியுடன் வந்ததால் இரு உன்னை வந்து கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போன அமமுக ஒன்றிய செயலாளர் மில்லர், படம் முடியும் நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் சிலரை அழைத்து வந்து மேனேஜர் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது

தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினர் தியேட்டர் மேலாளரை விரட்டி, விரட்டி தாக்கி, அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகும் அடங்காமல் அவரை கையை உடைத்து கொலை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.

அதிர்ஷடவசமாக தியேட்டரில் ஓடும் படத்தில் பிரதமரை காப்பாற்றும் காப்பான் சூர்யா போல அங்கு வந்த ரோந்து போலீஸ் மேனேஜரின் கண்ணுக்கு சூர்யா போலவே தெரிந்திருக்கிறார். விரைந்து வந்த அவர் அந்த கூலிப்படையினரிடம் இருந்து மேனேஜர் அலெக்சாண்டரை காப்பாற்றினார். போலீசை பார்த்து அங்கிருந்து கூலிப்படையினர் தெறித்து ஓடிவிட்டனர். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மில்லர், சந்தோஷ், நிவாஷ், அரவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிளான் போட்டு கொடுத்த  வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 5 பேரை போலீசாரை வலைவீசித் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்