சிதம்பரத்தில் மாணவி மீது ஆசிட் வீச்சு !! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அட்டகாசம் !!

Published : Sep 09, 2019, 11:15 PM IST
சிதம்பரத்தில் மாணவி மீது ஆசிட் வீச்சு !! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அட்டகாசம் !!

சுருக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  உடற்கல்விதுறையில் 2 ஆம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர் மீது சக மாணவன் திடீரென ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உடற்கல்விதுறையில் 2 ஆம் ஆண்டு படித்து வருபவர் முத்தமிழன். அதே வகுப்பில்  சுசித்ரா என்பவரும் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுசித்ரா திடீரென முத்தமிழனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், முத்தமிழன் மாணவி  சுசித்ரா மீது திடீரென ஆசிட் வீசியுள்ளார். இதைக் கண்ட சக மாணவர்கள் முத்தமிழனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆசிட் வீசியதில்  மாணவி சுசித்ரா படுகாயமடைந்தார்.

இதே போல் மாணவர்கள் தாக்கியதில் முத்தமிழனும் படுகாயமடைந்தார். இதையடுத்து காயமடைந்த  இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்