விஜய், ஹரி கூட்டணியில், காலையில் செல்போன் பறிப்பு. இரவில் பைக் திருடு..!! செம்ம கான்செப்டில் கலக்கல்... காத்திருந்து தூக்கிய காக்கிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2019, 11:19 AM IST
Highlights

அதனை பார்த்த போலிசார் மறைவாக நின்று இருந்தனர் அப்பொழுது இரண்டு இளைஞர்கள் அந்த இருசக்கர வாகனத்தை எடுக்கமுயன்ற பொழுது போலிசார் மடக்கி பிடித்தனர். போலிசார் விசாரணையில் பெரம்பூர் ரமணா நகர் பகுதியை சேர்ந்த ஹரி/20, விஜய்/20 ஆகியோர் என்பதும் இருசக்கர வாகனத்தை திருடி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. 

பெரம்பூரில் தொடர் இருசக்கரவாகன திருடு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட இருவரை போலீசார் பொறிவைத்து கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

சென்னை வியசார்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் உதயக்குமார்/35, தனியார் நிருவனத்தில் பணிப்புரிந்து வருகிறார்.  இவர் நேற்று முன்தினம் தனது  வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணமல் போனதாக செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு  வந்த போலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த பொழுது நேற்று காலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் அருகே அதே பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நின்று இருந்தது. 

அதனை பார்த்த போலிசார் மறைவாக நின்று இருந்தனர் அப்பொழுது இரண்டு இளைஞர்கள் அந்த இருசக்கர வாகனத்தை எடுக்கமுயன்ற பொழுது போலிசார் மடக்கி பிடித்தனர். போலிசார் விசாரணையில் பெரம்பூர் ரமணா நகர் பகுதியை சேர்ந்த ஹரி/20, விஜய்/20 ஆகியோர் என்பதும் இருசக்கர வாகனத்தை திருடி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. போலிசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு இரு சக்கரவாகனம் மற்றும் எட்டு செல்போன்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.
 

click me!