நட்சத்திர ஒட்டலில் போதையில் இருந்த இளம் பெண்... ரூம்பாயுடன் நடந்த கசமுசா விவகாரம்...!! 3 மணிநேரமாக போலீசை வச்சு செய்த சம்பவம்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2019, 11:36 AM IST
Highlights

அப்போது மது அருந்தி கொண்டிருந்த அந்தப் பெண் ஜன்னல் கதவுகளை மூடும்படி துப்புரவு பணியாளர்கள் இடம் கூறியுள்ளார்,  உடனே அந்த ஊழியர் ஜன்னல் கதவுகளை மூட  திடீரெனசத்தம் போட்ட அந்த பெண் காப்பாற்றும்படி அலறினார். இதைக்கேட்டு உடனே மற்ற ஊழியர்கள் அவரின் அறைக்கு சென்று பார்த்தபோது, ரூம் பாய் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். 
 

நட்சத்திர ஓட்டலில்போதையில் இருந்த பெண் ரூம்பாய் தன்னிடம் அத்துமீறியதாக கொடுத்த புகாரையடுத்து போதை தொளிந்த நிலைநில் வழக்கை வாபஸ் வாங்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் அப்படி நடந்துகொண்டதால் போலீசாரின் பல மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார்.  அப்போது போதையில் இருந்த அவர் ரிசப்ஷனுக்கு போன் செய்து தன் அறையை சுத்தம் செய்ய ரூம் பாயை அனுப்ப கூறினார்,   பின்னர் அவரது அறைக்கு சென்ற ரூம் பாய் அவரது அறையை சுத்தம் செய்துள்ளார்.  அப்போது மது அருந்தி கொண்டிருந்த அந்தப் பெண் ஜன்னல் கதவுகளை மூடும்படி துப்புரவு பணியாளர்கள் இடம் கூறியுள்ளார்,  உடனே அந்த ஊழியர் ஜன்னல் கதவுகளை மூட  திடீரெனசத்தம் போட்ட அந்த பெண் காப்பாற்றும்படி அலறினார். இதைக்கேட்டு உடனே மற்ற ஊழியர்கள் அவரின் அறைக்கு சென்று பார்த்தபோது, ரூம் பாய் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார்.

 

இதனையடுத்து அங்குவந்த போலீசாரிடம்  அந்தப் பெண் வாய்மொழியாக கொடுத்த புகாரின் பேரில், ரூம்பாயை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் சட்டரீதியாக அந்நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் ஏற்பாடு செய்து வந்த நிலையில்,  அந்தப் பெண் போதை தெளிந்த நிலையில் மறுநாள் காலை அதே தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார்.   தான் புகார் கொடுத்த நபரை ஒன்றும் செய்ய வேண்டாம்,  அவரை விட்டுவிடும்படி அங்கிருந்த போலீசாரிடம் அவர் கூறினார்.இதனையடுத்து  தலையில் அடித்துக் கொண்ட போலீசார், அந்த ரூம் பாயை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.  மது போதையில் இருந்த பெண் செய்த இந்த காரியத்தால் போலீசார் பலமணிநேரம் அலைக்கழிப்பு செய்யப்பட்டதாக போலீசார் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

click me!