சீட்டு விளையாட்டில் தகராறு... ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை!

Published : Jan 21, 2019, 10:20 AM IST
சீட்டு விளையாட்டில் தகராறு... ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை!

சுருக்கம்

சென்னையில் சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஓட்டேரி, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் குமரன் (22) ரவுடி. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சஞ்சனா என்ற குழந்தை உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் பாரதி இறந்தார். சமீபத்தில் கொலை, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில், தொடர்புடைய குமரனை டிபி.சத்திரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

இந்நிலையில் ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவர், புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் இருந்தவர்களுடன் நேற்று சீட்டுக் கட்டு விளையாடிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் குமரனை அந்த 6 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து சரமாரியாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது.  

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குமரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹைதர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் சூதாட்டம் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில், ஹைதர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்