இரவு பயங்கரமாக மாறிய சென்னை...! கொலைசெய்ய சுற்றிவந்தவர்களை... பொறிவைத்து அள்ளியது போலீஸ்...!

Published : Aug 20, 2019, 04:49 PM IST
இரவு பயங்கரமாக மாறிய சென்னை...!  கொலைசெய்ய சுற்றிவந்தவர்களை... பொறிவைத்து அள்ளியது போலீஸ்...!

சுருக்கம்

இதுதவிர கொலைக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள், கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 35 நபர்கள், கைபேசி மற்றும் செயின் பறிப்பு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட 43 நபர்கள்,  கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 15 நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 159 நபர்கள் மீது நன்னடத்தை கான குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவுகளான 107, 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னையில் போலீசார் அதிரடியாக நடத்திய ரோந்து பணியில் 83 அதிபயங்கர குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது.  

சென்னை பெருநகரத்தில் இரவு ரோந்துபணியை  தீவிரப்படுத்தவும் பழைய குற்றவாளிகள் மற்றும்  குற்ற பின்னணியில் உள்ள நபர்களை கண்டுபிடித்து விசாரிக்கவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்  உத்தரவிட்டார்.  அதனடிப்படையில் காவல் கூடுதல் ஆணையர் தினகரன்  அவர்களின் மேற்பார்வையில், வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தலைமையில் மூன்று காவல் கண்காணிப்பாளர்களும், அதோடு மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் பா விஜயகுமாரி அவர்களின் தலைமையில் மூன்று காவல் கண்காணிப்பாளர்களும் நேற்று இரவு  இரண்டு ஷிப்ட்களாக  இரண்டு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும் வைத்து தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அதில் சென்னை நகரில் 130 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டது,  155 தங்கும் விடுதிகள் தணிக்கை செய்யப்பட்டன,  இது தவிர அனைத்து சந்தேகத்திற்கிடமான குற்றம் நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களிலும் சிறிய குழுக்களாக காவலர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி சோதனையின் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 41 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டன.இதுதவிர வாகன சோதனையில் உரிமம் இல்லாத 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 18 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கொலைக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட 5 நபர்கள், கொள்ளை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 35 நபர்கள், கைபேசி மற்றும் செயின் பறிப்பு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட 43 நபர்கள்,  கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 15 நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 159 நபர்கள் மீது நன்னடத்தை கான குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவுகளான 107, 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 29 குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பொதுத்தொல்லை ஏற்படுத்திய 68 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுதவிர சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 301 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஆகமொத்தம் இந்த தீவிர இரவு ரோந்தில் 557 குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?