ஐஐடி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்..!! வசமாக சிக்கும் பேராசிரியர்கள்..??

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2019, 7:25 PM IST
Highlights

அதில் செல்போனில் உள்ள தற்கொலைக் குறிப்பு பொய்யானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா அவரது கைப்பேசியில் பதிவு செய்திருந்த தற்கொலை குறிப்புகள் உண்மையானது என தடயவியல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை ஐஐடியில் முதுகலைப் படித்துவந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த மாதம் 8 ஆம் தேதி தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .  இது நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது தமிழக அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பாத்திமாவின் தற்கொலைக்கு நீதி வேண்டுமென போராட்டத்தில் குதித்தனர்.  

இந்நிலையில் தற்கொலை செய்துகொள்வதற்கு  முன்பு பாத்திமா, சில பேராசிரியர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும்  அதனாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பாக பேராசிரியர் சுதர்சன் ,  பத்மநாபன் ,  உள்ளிட்ட ஆசிரியர்களின் பெயர்களை தனது செல்போனில் பதிவிட்டிருந்தார் .  இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கை மத்திய குற்றப் பிரிவு போலீசாரித்து வந்தனர்.  அதில்  மாணவி பாத்திமாவின்  செல்போனில் உள்ள தற்கொலை குறிப்புகள் உண்மையானதுதான  என்பதை விசாரித்து வந்த நிலையில்,   மாணவியின் செல்போன் லாக் செய்யப்பட்டு இருந்ததால் அதை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி தடயங்களை சேகரிக்க  கடந்த வாரம் மாணவியின் பெற்றோர்கள் முன்நிலையில் செல்போனை தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் தடயவியல் துறை தன் முதற்கட்ட ஆய்வறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வழங்கியுள்ளது.  அதில் செல்போனில் உள்ள தற்கொலைக் குறிப்பு பொய்யானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே மாணவி பாத்திமா லத்தீபின் தற்கொலைக் குறிப்பு போலியானது என பலரால் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது போலியானது இல்லை என்பது தடயவியல் துறையால் தெரிவிக்கப்பட்டிருப்பது வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது . இதையடுத்து மாணவியின் தற்கொலை தொடர்பான அதில் குறிப்பிடப்பட்டுள்ள  மூன்று பேராசிரியர்களுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!