டமார்... டமார்... ரவுடியை ரவுண்டு கட்டி சுட்டு சல்லடையாக்கிய போலீஸ்..!! சென்னையில் பயங்கரம்..!!

By Asianet TamilFirst Published Sep 25, 2019, 1:30 AM IST
Highlights

கொரட்டூரில் கூட்டாளிகளுடன்  பதுங்கியிருக்கிறார் மணிகண்டன் என தகவல் அறிந்து அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். அவர் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவரை சுற்றி வலைத்து பிடிக்க போலீசார் முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவை தலையில் தாக்கினார்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை சென்னை கொரட்டூரில் போலீசார் சுற்றி வலைத்து என்கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி  மணிகண்டன்(39). இவருக்கு  தாதா மணி என்ற பட்டப்பெயரும் உண்டு,  விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் கிராமத்தை சேர்ந்தவர் இவர். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது.  போக்கிரி பட்டியலில் நீண்ட கால குற்றவாளியாக இருந்தார் மணிகண்டன். இவர் மீது 10 க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 6 வழிப்பறி, 4 ஆட்கடத்தில் வழக்குகளும் நிலுவையில் இருத்து வந்தது. நீண்ட காலமாக தோடப்படும் குற்றவாளியாகவே இருந்து வந்தார் மணிகண்டன், இவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அனாலும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் ரவுடி மணிகண்டன்.

 

இடையிடையே கொலை, வழிப்பறி, அட்கடத்தல் என தொழிலையும் கண கச்சிதமாக செய்து வந்தார். எனவே பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்.   போலீசாருக்கும் மணிகண்டனை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது எப்படியாவது மண்கண்டனுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். மணிகண்டனை தீவிரமாக தேடி வந்த நிலையில் சில தினங்களாக அண்ணா நகரில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனால் விழுப்புரம் போலீசார் சென்னை வந்தனர். கொரட்டூரில் கூட்டாளிகளுடன்  பதுங்கியிருக்கிறார் மணிகண்டன் என தகவல் அறிந்து அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். அவர் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவரை சுற்றி வலைத்து பிடிக்க போலீசார் முயன்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் பிரபுவை தலையில் தாக்கினார், அப்போது உதவி ஆய்வாளர் பிரகாஷ்  தான் வைத்திருந்த   துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி இரண்டு முறை சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இந் நிலையில், சட்டம் ஒழுங்கு காவல் துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு இருக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் தனிப்படை உதவி ஆய்வாளர் பிரபு நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்.  விழுப்புரம் மாவட்ட ரவுடி மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது, மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டு இருந்த நிலையில் அவரை பிடிக்க சென்ற இடத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய மணிகண்டன் தற்காப்புக்காக காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர் இந்த சம்பவத்தில் தனிப்படை உதவி ஆய்வாளர் பிரபு மீது தலையில் அறுவால் வெட்டு விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்உதவி ஆய்வாளர் பிரபுவை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்


 

click me!