சென்னை இரட்டை கொலை வழக்கு.. ஏன் புள்ளையா இப்படி செஞ்சான்? கண்ணீர் விட்டு கதறிய தந்தை..!

By vinoth kumarFirst Published May 11, 2022, 10:27 AM IST
Highlights

எனது மகனா... இப்படி செய்து விட்டான் என்று கேட்டு லால்சர்மா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மாமல்லபுரம் பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்துள்ளேன். அவர் எவ்வளவு நல்ல மனிதர்? என்று கூறி தொழில் அதிபர் ஸ்ரீகாந்துடனான பழைய நினைவுகளையும் லால் சர்மா பகிர்ந்தார்.

சென்னை இரட்டை கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓட்டுநர் கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா கொலை பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இரட்டை கொலை

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் கார்டன் பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (60). ஆடிட்டரான இவர், ஐடி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு அனுராதா(55) என்ற மனைவி, மகள் சுனந்தா, மகன் சஸ்வத் ஆகியோர் உள்ளனர்.  மகன் மற்றும் மகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வரும் மகள் சுனந்தா பிரசவத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீகாந்த் தனது மனைவி அனுராதா உடன் அமெரிக்கா சென்று கடந்த 7ம் தேதி அதிகாலை சென்னை வந்த நிலையில் இருவரும் கொடூரமாக துறையில்  தங்களது கார் ஓட்டுநரால் இருவரும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு  பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கார் ஓட்டுநர் கைது

ஆடிட்டரை கொலை செய்தது குறித்து நேபாளம் நாட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நகைகள், வெள்ளி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இரட்டை கொலை சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிரைவர் கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா கொலை பற்றி கேள்விப்பட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கொலையாளியின் தந்தை அதிர்ச்சி

எனது மகனா... இப்படி செய்து விட்டான் என்று கேட்டு லால்சர்மா கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மாமல்லபுரம் பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்துள்ளேன். அவர் எவ்வளவு நல்ல மனிதர்? என்று கூறி தொழில் அதிபர் ஸ்ரீகாந்துடனான பழைய நினைவுகளையும் லால் சர்மா பகிர்ந்தார்.ஆடிட்டர் ஸ்ரீகாந்த் கிழக்கு கடற்கரை சாலை சூளேரிக்காடு பகுதியில் 2000ம் ஆண்டு  உங்கள் பண்ணை வீட்டை பராமரிக்கும் வேலையை கொடுங்கள் என்று தனது 4 குழந்தைகளுடன் வந்து கெஞ்சினேன். இதனையடுத்து, ஸ்ரீகாந்த் மனைவி அனுராதா வேலை போட்டு கொடுக்கும் படி கணவரிடம் கூறியதை அடுத்து எந்தவித நிபந்தனையும் இன்றி புதிதாக கட்டிய பண்ணை வீட்டில் ஒரு இடத்தில் தங்கி செக்யூரிட்டியாக என்னை பணியமர்த்தினார். அந்த வகையில் ஆடிட்டர் குடும்பத்திற்கும் செக்யூரிட்டி லால் சர்மா குடும்பத்திற்கும் 20 ஆண்டுகள் நல்ல முறையில் உறவு இருந்து வந்தேன். 

தனது மூத்த மகன் கிருஷ்ணா நன்றாக கார் ஓட்டுவார். இதனால் உங்களுக்கு தெரிந்த யாரிடமாவது வேலைக்கு சேர்த்து விடுங்கள் என்று ஆடிட்டரிடம் கூறினேன்.  இதனால், ஆடிட்டர் தனது வீட்டில் தங்கி கார் டிரைவராக வேலைக்கு வைத்து கொண்டார். மேலும் தன் வீட்டிலேயே அறை ஒன்றை தந்தார். அந்த வகையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கிருஷ்ணா ஆடிட்டர் வீட்டை பராமரித்து கொண்டு கார் டிரைவராக வந்ததாகவும் கூறினார். 

போலீஸ் தீவிர விசாரணை

இந்நிலையில், இந்த கொலையின் பின்னணியில் லால்சர்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாமல்லபுரத்தைச் அடுத்த பேரூரில் வசித்து வரும் கிருஷ்ணாவின் 2 தங்கைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் கிருஷ்ணாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர். இரட்டை கொலை தொடர்பாக கிருஷ்ணா, ரவிராய் இருவருக்கு மட்டுமே தொடர்பு இருந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. 

click me!