காதல் மன்னன் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!! டிஜிபி திரிபாதி உத்தரவு.!!

Published : May 28, 2020, 07:41 AM IST
காதல் மன்னன் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!! டிஜிபி திரிபாதி உத்தரவு.!!

சுருக்கம்

காதல்மன்னன் காசி மீது பல்வேறு பாலியல் புகார் வந்ததையடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்னும் வெளிவராத தகவல்கள் இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. திருமணம் ஆகாத இவர், ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை டாக்டர், நாகர்கோவிலில் உள்ள பெண் என்ஜினீயர், கன்னியாகுமரி சிறுமி உள்ளிட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே 2 முறை காவலில் எடுக்கப்பட்டு காசியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் காசி மீதுள்ள வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மாதர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தது.

இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரை செய்த நிலையில் டிஜிபி திரிபாதி ஆணை பிறப்பித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!