கார் ஓட்டுநர் கொலை வழக்கில் பகீர்... மகளின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய தந்தை!

Published : Aug 29, 2018, 03:36 PM ISTUpdated : Sep 09, 2018, 08:07 PM IST
கார் ஓட்டுநர் கொலை வழக்கில் பகீர்... மகளின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய தந்தை!

சுருக்கம்

கொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சினிமா நடிகையான தனது மகளின் கள்ளக்காதலால் விவகாரம் தொடர்பாக தந்தையே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

கொடைக்கானலில் வாடகை கார் ஓட்டுநர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சினிமா நடிகையான தனது மகளின் கள்ளக்காதலால் விவகாரம் தொடர்பாக தந்தையே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிரபாகரன் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

கடந்த 24-ம் தேதி இரவு காரை எடுத்து கொண்டு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை. கொடைக்கானல் கார்தே நகர் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரின் உட்புறத்தில் ரத்தக்கறை படிந்து இருந்ததோடு, மிளகாய் பொடி சிதறி கிடந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்டது பிரபாகரன் என்று தெரிவந்தது. இதனையடுத்து பிரபாகர் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுக்கவில்லை.

 

இதனையடுத்து அந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி செல்போன் சிக்னல் மூலமாக இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். செல்போன் சிக்னல் கிடைத்த சிட்டி டவர் எனும் இடத்திற்கு சென்ற போலீசார் வனப்பகுதியில் 50 அடி பள்ளத்துக்குள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பிரகாரன் சடலத்தை மீட்டனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மகளின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கார் ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கொடைக்கானல் ஆனந்தகிரி 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன், அண்ணாநகரை சேர்ந்த முகமது சல்மான், அவருடைய தம்பி முகமது இர்ப்பான், செந்தில் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த  பெண்ணின் தந்தையை  போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு