பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் !! 25 பேர் பரிதாப பலி !!

Published : Jun 20, 2019, 08:29 PM IST
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் !! 25  பேர் பரிதாப பலி !!

சுருக்கம்

இமாச்சல பிரதேசத்தில் மலைப்பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது 15 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்துள்ள நிலையில் 10 பேரின் உடல்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.

பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்தது. இதையடுத்து அருகிலுள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த  விபத்தில் உயிரிழந்த 25 நபர்களில் 15 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!