
இவர்களுக்கு, 6 வயதில் அஷ்வின் என்ற மகன் இருந்துள்ளார், சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம், வடவள்ளியில் உள்ள மெடிக்கல் கடையில் இது குறித்து, வாங்கப்பட்ட ஜென்ட்ராப் 4எம்டி, என்ற மாத்திரையை சிறுவனுக்கு, தாய் மாலா வழங்கியுள்ளார்.
மாத்திரை உட்கொண்ட சிறுவன் சற்று நேரத்தில் மாத்திரையோடு வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஷ்வினை அவரது தாய் மாலா, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு, அஷ்வின் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாலா நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் உட்கொண்ட மாத்திரையை காவல்துறையினர் ஆயுவகத்திற்க்கு, ஆயுவுக்காக அனுப்பி உள்ளனர். இதன் முடிவுகள் வந்த பின்னர் தான் மெடிக்கல் ஷாப்பில் இது குறித்து விசாரணை நடத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.