
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்.5 ஆம் தேதி சிறுமி காணாமல் பொனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன 13 வயது சிறுமி உடல் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் பிரபல சாமியாராக வளம் வந்தவர் ஆசராம் பாபு. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜோத்பூர் ஆசிரமத்துக்கு வரக்கூறிய ஆஸ்ராம் பாபு, தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர்.
இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது ஆஸ்ராம் பாபு 12 முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்தும் அத்தனை முறையும் அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஆசராம் பாபு குற்றவாளி என அறிவித்து ஜோத்பூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் அரசாம் பாபு உட்பட, அவரின் சீடர்கள், ஷில்பி, ஷரத் சந்திரா, சவராம் ஹெத்வேத்யா ஆகியோர் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற குற்றவாளிகளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.