பட்டா கத்திகளுடன் கேக் வெட்டி போஸ் கொடுத்த ரவுடிகள்... அலேக்கா தூக்கி மல்லக்க குத்தப்போகும் போலீஸ்..!

Published : Aug 31, 2019, 12:58 PM ISTUpdated : Aug 31, 2019, 01:01 PM IST
பட்டா கத்திகளுடன் கேக் வெட்டி போஸ் கொடுத்த ரவுடிகள்... அலேக்கா தூக்கி மல்லக்க குத்தப்போகும் போலீஸ்..!

சுருக்கம்

சென்னையைப் போன்று கோவையிலும் சிலர் பட்டா கத்திகளால் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையைப் போன்று கோவையிலும் சிலர் பட்டா கத்திகளால் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து 2 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரவுடிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் ரவுடிகள் அவ்வப்போது பரப்பி வருகின்றனர்.  

இந்நிலையில், கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவுடிகள் சிலர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர். அவர்கள் கத்தி, அரிவாளை உயர்த்தி போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

போலீசார் விசாரணையில் புகைப்படத்தில் உள்ள ரவுடிகள் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிவானந்தபுரத்தை சேர்ந்த சதீஸ்குமார் (27), அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (40) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், தலைமறைவாக உள்ள 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நள்ளிரவில் ரவுடிகள் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னர் விரைவில் இவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழ உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!