மருமகளை வலுகட்டாயமாக அடைய முயன்ற மாமனார்... கணவனிடம் காட்டிக் கொடுக்காமல் இளம்பெண் செய்த திடீர் திருப்பம்..!

Published : Aug 31, 2019, 11:22 AM ISTUpdated : Aug 31, 2019, 11:31 AM IST
மருமகளை வலுகட்டாயமாக அடைய முயன்ற மாமனார்... கணவனிடம் காட்டிக் கொடுக்காமல் இளம்பெண் செய்த திடீர் திருப்பம்..!

சுருக்கம்

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மருமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் மருமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், ஜமகண்டி தாலுகா ஜம்பகிகேடி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராய மல்லேஷ்வரா (56). இவரது மனைவி கலாவதி (45). இவர்களின் மருமகள் கீதா. இந்நிலையில் கீதாவுக்கு அவருடைய மாமனார் தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கீதா கணவரிடம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாமனார், அடிக்கடி கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீதாவை பாலியல் பலாத்காரம் செய்ய சித்தராயா முயற்சித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கீதா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார்.  அலறியபடியே  சித்தராயா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அவரது மனைவி கலாவதி வீட்டுக்குள் வந்து கீதாவை தடுக்க முயற்சித்துள்ளார். இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த கீதா,  மாமியாரையும் தாக்கியுள்ளார். இதில் மாமனார், மாமியார் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் மாமனாரின் பாலியல் தொல்லை தாங்காமல் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும், தடுக்க வந்த மாமியாரையும் தீர்த்துக்கட்டியதாகவும் கீதா தெரிவித்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்
இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!