எருமை மாடுகளை திருட வந்ததாக 3 பேர் அடித்துக்கொலை …. பீகாரில் கொடூரம் !!

Published : Jul 20, 2019, 07:23 AM IST
எருமை மாடுகளை திருட வந்ததாக 3 பேர் அடித்துக்கொலை …. பீகாரில் கொடூரம் !!

சுருக்கம்

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் எருமை மாடு திருட வந்ததாக 3 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பிதாயூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 நபர்கள் இன்று சுற்றித் திரிந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களையும் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து, அந்த நபர்கள் தப்பி செல்ல முயற்சித்தனர். அதற்குள் அந்த கும்பல் 3 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும், சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?