நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவு!! ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்...

By sathish kFirst Published Sep 6, 2018, 9:33 PM IST
Highlights

பாலியல் பலாத்கார வழக்கில் பலவருடங்களாக நீதிமன்றத்தில்  ஆஜராகாத நித்தியானந்தாவை ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து கைது செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் நித்தியானந்தா என்று ஆர்த்திராவ், லெனின், பரத்வாஜ் ஆகிய மூன்று பேர் கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் புகார் அளித்தனர்.  

அந்தப்புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. அதனைத் அடுத்து  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

இந்த  வழக்கில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்த நிலையில், மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க வர மறுத்தார் நித்தியானந்தா. இதனால் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க ஹைக்கோர்ட் ஆணை பிறப்பித்தது உத்தரவிட்டது. இதனை அடுத்து பொய்யான மருத்துவ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தி  ஹைக்கோர்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட். 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்த்து ராம்நகர் மூன்றாவது பெஞ்ச் கோர்ட் நித்தி வழக்கு தொடர்ந்த வழக்கை ராம்நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. கர்நாடகா ஹைகோர்ட்டில்  நித்தி தாக்கல் செய்த மனு கடந்த மே 16ம் தேதி  தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஹைகோர்ட்டில் நித்தி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த ஹைகோர்ட்  அந்த மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர். 

உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ராம்நகர் ஹைகோர்ட்ல்  ஜூன் 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட்டது.   விசாரணையை அடுத்து, போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்திக்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று ராம்நகர் ஹைகோர்ட்  அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

ஆனாலும் நித்தி ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை.  ராம்நகர் கோர்ட்டில் நித்தி தொடர்பான வழக்கு கடந்த மாதம்  விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவையும் செப்டம்பர் 1ம் தேதி அன்று  தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.  மேலும், ராம்நகர் கோர்ட்டில் 7-ந் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டது. 

இதனால் நித்திக்கு பெங்களூர் மருத்துவமனையில் இன்று 6-ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு,  நாளை 7ம் தேதி அவர்  ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.  இந்நிலையில், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று முறை ஆஜராகாததால் கர்நாடக ராம்நகர் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

click me!