என்னுடைய பெயரை சந்தியா பச்சை குத்தியிருந்தார்' என்று சந்தியா மீதான காதலை வெளிப்படுத்திய பாலகிருஷ்ணன், சந்தியாவின் வலது கையை மட்டும் அவர் துண்டித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை சொல்ல மறுத்துவிட்டாராம்.
என்னுடைய பெயரை சந்தியா பச்சை குத்தியிருந்தார்' என்று சந்தியா மீதான காதலை வெளிப்படுத்திய பாலகிருஷ்ணன், சந்தியாவின் வலது கையை மட்டும் அவர் துண்டித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை சொல்ல மறுத்துவிட்டாராம்.
தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சினிமா இயக்குநராக உள்ளார். இவர், இவர் தந்து மனைவி சந்தியாவைக் கொலை செய்த குற்றத்துக்காக பாலகிருஷ்ணனை பள்ளிக்கரணை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பவரை குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கணவர் பாலகிருஷ்ணாவை கைது செய்து மற்ற பாகங்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சந்தியாவின் இடுப்பு, முழங்கால் பாகங்களை அடையாறு ஆற்றில் கண்டெடுத்துள்ளனர். ஆனாலும் போலீஸார் இன்னமும் சந்தியாவின் தலை, இடதுகையுடன் கூடிய உடல்பாகங்களை சோர்ந்துப்போகாமல் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனின் மனா தைரியத்தைப் பார்த்து போலீஸாருக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சந்தியா பற்றி விசாரித்தபோது அவர் எந்தவித பதற்றமும் இன்றி சர்வசாதாரணமாக பதிலளித்துள்ளார். அப்போது போலீஸாரிடம் சந்தியா குறித்து முக்கிய பல தகவல்கள் கூறியுள்ளார்.
அதில், நான் சந்தியாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவளை கல்யாணம் செய்த நாள் முதல் கொலை செய்வதற்கு முன்பு வரை அவள் மீது பாசமாக இருந்தேன். என்னை எப்போதும் சந்தியா மறக்கக்கூடாது என்பதற்காக உடலில் மூன்று இடங்களில் அவர் பச்சைக் குத்தியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய பெயரை சந்தியா தன்னுடைய வலது பக்கத்தில் உள்ள மார்பு பகுதியில் பச்சை குத்தினார். பச்சைக் குத்தும்போது வலியால் துடித்தார். ஆனாலும் எனக்காகத் தாங்கிக் கொண்டார். அந்தளவுக்கு என்மீது பாசமாக இருந்தாள். நானும் அவளுக்காகவும் குழந்தைகளுக்காகவும் சென்னையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்தேன். சந்தியாவின் மீதான என் காதல் ஒருநாளும் குறையவில்லை.
அதேபோல, நாங்கள் சிவனை வணங்குவதால், அவளின் வலது கையில் சிவனையும் பார்வதியையும் பச்சைக் குத்திக் கொண்டாள். சிவனாக நானும் பார்வதியாக சந்தியாவும் எப்போதும் வாழவேண்டும் என்று தான் ஆசைப்பட்டோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் விதி விதிவிளையாடிவிட்டது என்று கண்ணீரோடு தான் சந்தியா மீது வைத்திருந்த காதலை கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, சந்தியாவின் வலது கையை மட்டும் அவர் துண்டித்ததற்கு ஒரு காரணம் இருப்பதாகவும். ஆனால், அந்தக் காரணத்தை அவர் சொல்ல மறுத்துவிட்டார் என்கின்றனர் போலீஸார்.