பிரசவத்தில் தவறான சிகிச்சையால் தாய், குழந்தை பலி... அவசர அவரசமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய தனியார் மருத்துவனை!!

By sathish kFirst Published Sep 5, 2019, 3:59 PM IST
Highlights

தவறான சிகிச்சையால் உயிரிழந்த தாயையும், குழந்தையையும் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனியார் மருத்துவனை நிர்வாகம்  நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 

தவறான சிகிச்சையால் உயிரிழந்த தாயையும், குழந்தையையும் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனியார் மருத்துவனை நிர்வாகம்  நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூரைச் சேர்ந்த விஜின். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் அவர், மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் என்ற தனியார் மருத்துவமனையில் தனது மனைவி திவ்யாவை பிரசவத்திற்காக நேற்று சேர்த்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை டாக்டர்கள் பிரசவ அறைக்கு கொண்டு சென்றுள் சிறிது நேரம் ஆனதும், மெர்லின் திவ்யாவையும், பிறந்து சில நிமிடமே ஆன சிசுவையும் யாரிடமும் சொல்லாமல் அவசர ஆம்புலன்சில் டாக்டர்கள் அனுப்பி வைத்ததைப் பார்த்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

எங்கே, அனுப்பி வைக்கிறீர்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

அவசர ஊர்தியை பின் தொடர்ந்து சென்றதாகவும், அது 300 மீட்டர் தொலைவில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு, திவ்யாவை பரிசோதித்த அரசு டாக்டர்கள் , தாயும், குழந்தையும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், தவறான சிகிச்சையால் தாயும் குழந்தையும் உயிரிழந்து விட்டதாகவும், இதை மறைப்பதற்காகவே தனியார் மருத்துவமனை நாடகமாடியதாகவும் குற்றம் சாட்டியும். இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்துள்ளனர். உரிய உபகரணங்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே மனைவியும், குழந்தையும் உயிரிழந்த துக்கம் தாங்கமுடியாத கணவன்  மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!