பிரசவத்தின் போது தனியாக வந்த குழந்தையின் தலை..! கூவத்தூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்..!

Published : Mar 20, 2019, 04:54 PM ISTUpdated : Mar 20, 2019, 04:56 PM IST
பிரசவத்தின் போது தனியாக வந்த குழந்தையின் தலை..! கூவத்தூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்..!

சுருக்கம்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து  குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பொம்மிக்கு பிரசவத்தின் போது குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ளது.மருத்துவமனையில் அனுமதித்த போது, அங்கு மருத்துவர் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் ஒன்று சேர்ந்து பிரசவம் பார்த்து உள்ளனர்.

அப்போது, தாயின் கருவறையில் குழந்தையின் உடல் மட்டும் சிக்கிக்கொண்டு உள்ளது. ஆனால் குழந்தையின் தலை தனியாக வெளிவே வந்துள்ளது. உடனடியாக பதறிய செவிலியர்கள் இது குறித்து உறவினர்களுக்கு தெரிவித்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம், கர்ப்பிணி பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்  குழந்தையின் உடலையும் கருவில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதற்கு பொதுமக்கள் பெரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும் மருத்துவர் இல்லாததே இதற்கு காரணம் என்றும், செவிலியர்கள் தவறாக பிரசவம் செய்ய முயன்று உள்ளனர் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவுசெய்து, செவிலியர் முத்துகுமாரி உடன் விசாரணை செய்து  வருகின்றனர். இது குறித்து பேசிய செங்கல்பட்டு சுகாதார துணை இயக்குனர் பழனி, குழந்தை ஏற்கனவே இறந்து அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!