அக்காவை கொன்று விடுவேன்..! கொழுந்தியாளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்..!

Published : May 20, 2020, 02:33 PM ISTUpdated : May 20, 2020, 02:37 PM IST
அக்காவை கொன்று விடுவேன்..! கொழுந்தியாளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்..!

சுருக்கம்

வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பேச்சு கொடுத்த சுப்புராஜ் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த சிறுமி அலறவே, ’வெளியே யாரிடமாவது கூறினால் உனது அக்காவை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார். 

தென்காசி மாவட்டம் புளிச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ்(26). ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத சுப்புராஜ் வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இருக்கும் நிலையில் அவரது மனைவியின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சுப்புராஜின் மனைவி தனது தங்கையான ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 16 வயது சிறுமியை தனது வீட்டில் அழைத்து வந்து தங்க வைத்திருக்கிறார்.

சுப்புராஜிற்கு மனைவியின் தங்கை மீது ஆசை ஏற்பட்டிருக்கிறது. அவரை பலமுறை அடைய நினைத்திருக்கிறார். இதனிடையே வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பேச்சு கொடுத்த சுப்புராஜ் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த சிறுமி அலறவே, ’வெளியே யாரிடமாவது கூறினால் உனது அக்காவை கொலை செய்து விடுவேன்’ என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி உடனடியாக  தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்புராஜை அதிரடியாக கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் தனியாக இருந்த மனைவியின் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..