பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதால் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் அரணார் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் முருகன் (வயது 29). வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி சிறுமி பல் வலி காரணமாக பெரம்பலூர் செல்ல வேண்டி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அகழாய்வில் தோண்ட தோண்ட புதையல்கள்; கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்வர் பெருமிதம்
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் சிறுமி செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிறுமி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகிலிருந்த வனப்பகுதிக்கு சிறுமியை அழத்துச் சென்றுள்ளார். மேலும் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
பெண்களின் சபரிமலை; மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கொடியேற்றம்
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் முருகனை தேடிவந்த காவல் துறையினர் இன்று கைது செய்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.