ஆள் இல்லாத வீட்டில் ரூ.20 ஆயிரம் பணத்தை திருடும்போது அதைப் பார்த்த 9 வயது சிறுமியைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன ஒன்பது வயது சிறுமி திங்கள்கிழமை இரவு அவரது வீட்டின் ஸ்டோர்ரூமில் உள்ள அலமாரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 19 வயது இளைஞரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொடூரமான கொலை வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து செவ்வாய்கிழமை டிசிபி விகாஸ் குமார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் வீட்டில் பணத்தைத் திருடியுள்ளார். அதைச் சிறுமி பார்த்துவிட்டதால், அந்த நபர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். கைது செய்யப்பட்டதும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார்.
மார்டன் மாமி யூடியூப் சேனல் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்த கோவை பெண் உள்பட 3 பேர் கைது
ஆக்ரா மாவட்டத்தின் ஜகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சன்னி இறந்த சிறுமியின் குடும்பத்தினருடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியைக் காணவில்லை என்று தேடும்போது அந்த இளைஞரும் உதவிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இளைஞர் சன்னி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சிறுமியின் வீட்டிலிருந்து திருடிய ரூ.20,000 ரொக்கப் பணமும் மீட்கப்பட்டது. போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த போது சிறுமியின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்ததாக போலீசார் கூறுகின்றனர். வேலையின் தன்மை காரணமாக, அவர்கள் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு செல்லவேண்டி இருந்திருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியை கவனித்துக்கொள்ளுமாறு குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சன்னியின் குடும்பத்தினரிடமும் மற்ற அண்டை வீட்டாரிடமும் கேட்டுக்கொண்டிருந்தனர் எனவும் காவல்துறையினர் சொல்கின்றனர்.
மேக் புக் வாங்கணுமா! வந்தாச்சு 15 இன்ச் மேக் புக் ஏர்! ஆப்பிள் கொடுத்த அட்டகாசமான அப்டேட்!