கடனில் இருந்து தப்பிக்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தை அரங்கேற்றிய பெண்

By Velmurugan sFirst Published Apr 5, 2023, 10:35 AM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெண் மீது ஆசிட் வீசப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணே கள்ளக்காதலன் உதவியுடன் ஆசிட் வீச்சு நாடகத்தை அரங்கேற்றியது விவசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் சித்திரங்கோடு அருகே அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி லதா தனது ஆலையிலிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில் பேருந்திலிருந்து வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த லதா தன்னை காப்பாற்றும்படி  கூக்குரலிட்டுள்ளார். இதையடுத்து அப்பக்கத்தினர் லதாவை  மீட்டு, குலசேகரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் காவல்துறையினர் 2 தனிப்படை அமைத்து குலசேகரம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

தைரியம் இருந்தால் தஞ்சையில் கால் வையுங்கள்; மத்திய அரசுக்கு விவசாயிகள் பகிரங்க எச்சரிக்கை

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடிவந்த நிலையில் லதா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லதாவிடம் காவல்துறையினர் நடந்திய கிடுக்குபிடி விசாரணையில், சுமார் 35 லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகவும், கடன் வழங்கியர்களிடமிருந்து தப்பிக்க தனது கள்ளகாதலனான முதலார் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் கிருமாதாஸ் என்பவருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து கள்ளகாதலனான கிருபாதாஸ் (வயது 52), அவருக்கு உதவிய ஜெஸ்டின்ராபின் (39), ஷாஜின்(23), அர்ஜூன் குமார் (24) ஆகியோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்ட பெண்ணால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

click me!