கல்யாணம் பண்ணி வச்ச ஐயருடன் ஓடிப்போன புதுப் பொண்ணு !! தவித்துப் போன் மாப்பிள்ளை !!

Published : May 28, 2019, 10:38 PM IST
கல்யாணம் பண்ணி வச்ச ஐயருடன் ஓடிப்போன புதுப் பொண்ணு !! தவித்துப் போன் மாப்பிள்ளை !!

சுருக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகை பணத்துடன் ஓடிப்போனதால் அவர்களி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் மகாராஜ். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வினோத் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை புரோகிதராக இருந்து வினோத் தான் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த புதுப்பெண் மாயமானார். அவரை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தேடிய போது வினோத்தும் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வினோத்துக்கும், அந்த பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளாக பழக்கம் இருந்த நிலையில் இருவரும் ஓடி போனது தெரிய வந்தது. 

போகும் போது தனது வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.30,000 பணத்தை புதுப்பெண் எடுத்து கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!