அடுத்தமாசம் கல்யாணம், 3 பேரால் கடத்தப்பட்ட இளம் பெண்... நள்ளிரவு 1 மணிக்கு வந்த போன் கால்! திக் திக் கிரைம்...

By sathish kFirst Published Sep 16, 2019, 6:10 PM IST
Highlights

மயிலாடுதுறை அருகே இளம் பெண்னை காரில் கடத்தி சென்ற வடமாநில கும்பல் அவரை பாதியில் இறக்கி விட்டுள்ளனர். அவர்கள் பாதியில் இறக்கிவிட காரணம் என்ன?  பார்க்கலாம். 

மயிலாடுதுறை அருகே இளம் பெண்னை காரில் கடத்தி சென்ற வடமாநில கும்பல் அவரை பாதியில் இறக்கி விட்டுள்ளனர். அவர்கள் பாதியில் இறக்கிவிட காரணம் என்ன?  பார்க்கலாம். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் வேளூர் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகள் காயத்ரி ( வயது 26 ) மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் தினமும் தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு காயத்ரி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே சிறிது தூரத்தில் அதிவேகமாக வந்த ஒரு கார்ஒன்று, காயத்ரி ஸ்கூட்டரை வழிமறித்து நின்றது. திடீரென காரில் இருந்து இறங்கிய 3 பேர், காயத்ரியை குண்டுக்கட்டாக தூக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பிக்க கூச்சல் போட்டார். ஆனால் அந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் மர்ம கும்பல் சிறிதும் தாமதிக்காமல், காரில் காயத்ரியை தூக்கிப் போட்டுக்கொண்டு சென்றனர்.

இதற்கிடையே வீட்டுக்கு வராமல் இருந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வீட்டு அருகே காயத்ரி ஸ்கூட்டர் மற்றும் செருப்புகள் கிடப்பதாக பார்த்த அக்கம் பக்கத்தினர் சொன்னதை கேட்டு உடனே சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் பார்வையிட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி காயத்ரியின் பெற்றோர்  போலீசில் புகார் செய்தனர். அப்போது மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை, ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். இந்த சம்பவம் பற்றி அவருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கிளியனூர், பள்ளிவாசல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிராக்களின் பதிவை வைத்து சோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே நள்ளிரவு 1 மணி அளவில் காயத்ரி, தனது தந்தை சிற்றரசுக்கு செல்போனில் பேசினார். அப்போது தன்னை கடத்திய கும்பல், திருவாரூர் கங்களாஞ்சேரியில் இறக்கி விட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார். இதனால் உடனே போலீசார் துணையுடன் கங்களாஞ்சேரிக்கு சென்று காயத்ரியை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் போலீசார், காயத்ரியிடம் நடத்திய விசாரணையில்  என்னை வீடு அருகே காரில் வந்த 3 பேர் கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தினர். இரவு நேரமாக இருந்ததால் கார் எந்த திசையில் போகிறது என்று தெரியவில்லை. காரில் இருந்த 3 பேரும் இந்தியில் ஏதேதோ பேசினார்கள்.

என் காதில் கிடந்த கம்மலை கழட்டி கொண்டனர். மேலும் கொலுசையும் எனக்கு நிச்சயத்தார்த்துக்காக போடப்பட்ட மோதிரத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அப்போது நான் அந்த கும்பலிடம், தயவு செய்து என்னை விட்டுடுங்க. எனக்கு திருமணம் சீக்கிரம் நடக்க உள்ளது’ என்று கதறி அழுதேன். அப்போது அவங்க என்னை செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.

பின் அவங்க 3 பேரும் இந்தியில் ஏதோ பேசிக் கொண்டனர். இதையடுத்து கங்களாஞ்சேரியில் காரை நிறுத்தி விட்டு என்னை இறங்கினர். அப்போது என்னிடம் பிடுங்கிய மோதிரத்தை மட்டும் என்னிடம் திருப்பி கொடுத்து விட்டனர். பிறகு வேகவேகமாக காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து சாலையோரத்தில் நின்ற சிலரிடம் எனது நிலையை எடுத்து கூறினேன். அவர்கள் தந்த செல்போனை வைத்து எனது தந்தைக்கு தகவல் கொடுத்தேன் இவ்வாறு அவர் கூறினார்.

click me!