இந்திய கப்பற்படை ரகசியங்கள் கசிந்தன...!! பாகிஸ்தானுக்கு உளவு சென்ன 7 மாலுமிகள் கைது..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2019, 1:38 PM IST
Highlights

பகிர்ந்துள்ள  ரகசியங்கள் கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தொடர்பானது என்பதால் விசாகப்பட்டினம் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மட்டுமல்லாது அணுசக்தியால் இயங்கும் ஹரிஹந்த்  என்ற நீர்மூழ்கி கப்பலின் கட்டுமான தளமும் ஆகும். 

இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானியர்களுடன் பகிர்ந்து கொண்ட குற்றத்துக்காக  இந்திய கடற்படையை சேர்ந்த 7 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்,  இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஏற்கனவே  நாட்டின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான்,  சீனா உள்ளிட்ட நாடுகளால் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில்  இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்திய கடற்படையில் சேர்ந்தவர்களே ரகசிய தகவல்களை   பாகிஸ்தானியர்களுடன் பகிர்ந்திருப்பது   மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள ஆந்திர டிஜிபி கவுதம் ,  சமூக வலைதளங்களில் சிலருடன் ஏற்பட்ட நட்பின்  காரணமாக அவர்களின்  பேச்சை நம்பி இந்திய கப்பற்படையின்  தகவல்களை கப்பல் படையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலம்  அவர்களுடன் பகிர்ந்துள்ளனர்.  இது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .  கைது செய்யப்பட்டவர்கள் விசாகப்பட்டினத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.  ஏற்கனவே இவர்கள் பகிர்ந்துள்ள  ரகசியங்கள் கடற்படையின் கிழக்கு பிராந்தியம் தொடர்பானது என்பதால் விசாகப்பட்டினம் கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் மட்டுமல்லாது அணுசக்தியால் இயங்கும் ஹரிஹந்த்  என்ற நீர்மூழ்கி கப்பலின் கட்டுமான தளமும் ஆகும்.  

 எனவே என்ன மாதிரியான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது என்று விசாரணை நடத்த வேண்டிய அவசியம்  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  அதாவது ஆந்திர கடற்படை மற்றும் மத்திய உளவுப்படை இணைந்து நடத்திய டால்ஃபின் நோஸ் என்ற ரகசிய சோதனையில் இந்த 7 பேரும்  சிக்கினர்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!