கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 4 இளம் பெண்கள் தற்கொலை..! எதற்கு தெரியுமா..? பகீர் சம்பவம்..!!

Published : Mar 28, 2022, 12:16 PM IST
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 4 இளம் பெண்கள் தற்கொலை..! எதற்கு தெரியுமா..? பகீர் சம்பவம்..!!

சுருக்கம்

கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 4 இளம்பெண்கள் தற்கொலை செய்து இருப்பது பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடரும் தற்கொலை சம்பவங்கள் :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாசவி நகரை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி வைஷ்ணவி(24)க்கு கடந்த 24ம் தேதி பிறந்த நாளாகும். அன்று மாலை, வேலைக்கு சென்ற கோபி வீட்டிற்கு வந்த போது, வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை ஓசூர் டவுன் போலீல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் அருகே அமலட்டியை சேர்ந்தவர்கள் நவீன்குமார், சவுமியா (25) தம்பதி. இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில் குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்,லட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். லட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி(40). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கலைவாணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!