லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்... புதையலுக்காக 3 பேர் நரபலி..? ஆந்திராவை அதிர வைக்கும் சம்பவம்..!

Published : Jul 17, 2019, 01:49 PM IST
லிங்கத்திற்கு ரத்த அபிஷேகம்... புதையலுக்காக 3 பேர் நரபலி..? ஆந்திராவை அதிர வைக்கும் சம்பவம்..!

சுருக்கம்

ஆந்திராவில் சிவன் கோயில் வாசலில் பூசாரி உள்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நரபலியா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவில் சிவன் கோயில் வாசலில் பூசாரி உள்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நரபலியா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவின் கதிரி அடுத்த கோரிகோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகராக ஓய்வுபெற்ற ஆசிரியரான சிவராம்ரெட்டி(70) பூஜைகளை செய்து வந்தார். இவருக்கு அவரது அக்கா கமலம்மா (75) மற்றும் சிவராம்ரெட்டியின் உறவினரும் உதவியாக இருந்து வந்தார். சிவராம்ரெட்டி சிவன் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மூலவர் சன்னதி அமைந்துள்ள பகுதியில் சுவர்கள் எழுப்பப்பட்டு கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலரும் சிவராம்ரெட்டிக்கு உதவி செய்து வந்தனர்.

 

இந்நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் அருகே 3 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கோயில் முழுவதிலும் சிவலிங்கத்திற்கும் ரத்தத்தால் அபிஷேகம் செய்து, புற்று மீதும் ரத்தத்தை தெளித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிவராம்ரெட்டி, கமலம்மா, சத்தியலட்சுமி ஆகிய 3 பேரையும் முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா? அல்லது சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக கூறியதால் நரபலியா?  என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!