கரும்புலி வேட்டையர்கள் துப்பாக்கி சூடு... மூன்று காவலர்கள் உயிரிழப்பு... ம.பி.யில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published May 14, 2022, 10:37 AM IST
Highlights

காவலர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், வேட்டையர்கள் காட்டுப் பகுதிக்குள் விரைந்து சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

மூன்று காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கரும்புலி வேட்டையாடுவோர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று காவலர்கள் உயிரிழந்தனர். காவலர்கள் வேட்டையாடுவோரை காட்டுப் பகுதியில் வைத்து சுற்றி வளைத்தனர். அப்போது பதற்றம் அடைந்த வேட்டையர்கள் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவலர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், வேட்டையர்கள் காட்டுப் பகுதிக்குள் விரைந்து சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

துப்பாக்கி சூடு:

தாக்குதலின் போது வேட்டையர்கள் துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ. ராஜ்குமார் ஜதவ், தலைமை கான்ஸ்டபில் சந்த் குமார் மினா மற்றும் கான்ஸ்டபில் நீரஜ் பார்கவ் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் காவல் துறை வாகனத்திற்கான ஓட்டுனரும் பலத்த காயமுற்றார். காயமுற்ற ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

கரும்புலியை வேட்டையாட சிலர் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளனர் என மத்திய பிரதேச மாநிலத்தின் குனா மாவட்ட ஆரோன் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்தே காவல துறை அதிகாரிகள் வேட்டையர்களை பிடிக்க காட்டுக்குள் சென்றனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது காட்டுப் பகுதிக்குள் இருந்து கரும்புலி உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. 

முதல்வர் நடவடிக்கை:

காவலர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் நரோட்டம் மிஷ்ரா, காவல் துறை டி.ஜி. மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் முதல்வருடனான சந்திப்பில் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

click me!